முயற்சி

முரட்டு மூங்கிலிலும்
காற்று நுழைந்து இசையாகும்
இருட்டு வேலையிலும்
நிலவு ஒளிர்ந்து வழிகாட்டும்
துன்பம் வந்ததென்று
தோழா துவண்டு வீழாதே
இன்பம் நாளை வரும்
தோழா முயற்சியை இழக்காதே

பூமி புதையும் விதையைபார்
நாளை விருட்சமாய் மாரும்
சிறைபட்ட நீர்துளியும் - ஒருநாள்
சிப்பியில் முத்தாகும்
விதியென்று வீழ்ந்து விட்டால் – புது
விதி செய்ய யார் வருவார்
தோல்விகள் விட்டு விடு – இனி
வெற்றியில் நிலைத்து விடு

சரித்திரம் படைப்பதற்கு – நீ
சத்தியம் செய்து கொடு
சந்தர்ப்பம் உனதாக்கு – புது
சந்தர்ப்பம் உருவாக்கு
கோல்களின் கோபத்தினால்
     நடப்பது நடக்கட்டுமே
நீ செயலிலே நிலைத்துவிடு – பாரில்
     கோலோச்சும் நிலையை பெறு

Comments

  1. நம்பிக்கைவித்து

    ReplyDelete
  2. அருமையான கருத்துக்கள் வரிகளில்...

    வாழ்த்துகள் ஐயா...

    ReplyDelete
  3. சிறப்பான பகிர்வு. பாராட்டுகள்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

குருவே சரணம்

மண் காப்போம்

மண் காப்போம்