சிந்திக்க - 4

இன்று ஏறுதழுவலுக்கு ஆதரவாக குவிந்த தமிழ் சிங்கங்களை நினைக்கையில் உள்ளம் மகிழ்கிறது.  நம் பாரம்பரியம் மீட்டெடுக்கப்படும் என்பதிலும் நம்பிக்கை துளிர்க்கிறது.

அதோடு கூட விவசாயத்தை காப்பது குறித்த எண்ணமும் இளைஞர்களின் மனதில் கனன்று கொண்டிருப்பதையும் உணர முடிகிறது.

விவசாயத்தை காக்க நீர்வளத்தை பெருக்குவதை தவிர சரியான ஒரு நிரந்தர தீர்வு வேறெதுவும் இருக்கமுடியாது என்பதில் மாற்றுகருத்து இல்லை.

ஆனால் நீர்வளத்தை பெருக்க நதிநீர் இணைப்பு மட்டும் தான் தீர்வு என்பது தவறு.

நம் பூமி வறண்டதிற்கும், காற்றின் ஈரப்பதம் குறைந்ததிற்கும், மழை குறைந்ததிற்கும், மழை பெய்தாலும் 4ங்கு 5 மாதங்கள் இருக்க வேண்டிய நிலத்தடி நீர் விரைவாக குறைவதற்கும், மழை பெய்த சில நாட்களிலேயே காற்றின் ஈரப்பதம் முற்றிலுமாக குறைவதற்கும் காலம் மாறி பெய்யும் மழையின் தொல்லை என அனைத்து பிரச்சினைக்கும் காரணம்...

சீமைகருவேலம் மரமே.

அதை தமிழ்நாட்டிலிருந்தே அழிக்க வேண்டும்.
அதை அழித்தால் காற்றின் ஈரப்பதம் காக்கப்பட்டு மழை பொழிவு சீரடையும், பெய்த மழையின் நீர் நிலத்தடி நீர்மட்டத்தை அதிகப்படுத்தும் நிலம் வளமாகும் உரம் தேவையே இருக்காது.

கோர்ட்டே ஆணையிட்டும் சீமைகருவேலம் மரங்களை அழிக்க அரசு எந்த முன்னெடுப்பும் எடுக்கவில்லை. 

கேரளாவில் ஒரு இயக்கமாகவே நடத்தி சீமைகருவேலம் மரங்களை அம்மக்கள் அகற்றினர்.

நம் உற்பத்தியில் வரும் உணவை  உண்போம்.
விவசாயத்தையும் விவசாயியையும் காப்போம்

தமிழனாய் இணைவோம்.

Comments

  1. ஆமாம், சீமை கருவேலத்தை முதலில் அகற்ற வேண்டும்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

குருவே சரணம்

மண் காப்போம்

மண் காப்போம்