Posts

Showing posts from August, 2010

64வது சுதந்திர தினம்

பார்க்கும் இடத்தில் குப்பை போட்டு நின்ற இடத்தில் எச்சில் துப்பி ஜாதியின் பேரில் சண்டைகள் போட்டு மாநிலங்களுக்கிடையில் பிரச்சினை கிளப்பி லட்சம் தந்தே வேலையை முடித்து அந்நிய பொருளை நாளும் வாங்கி வாழ்நாள் முழுவதும் சொகுசாய் வாழ்ந்து - நாங்கள் நாட்டின் அமைதியை நாளும் குலைத்தாலும் எங்கள் தவறுகளையெல்லாம் குழந்தையின் குறும்புகளாய் மன்னித்து... காஷ்மீர் மலையில் கொட்டும் பணியில் நடுங்கும் குளிரில் நம் தாயகத்தை காக்கும் நாயகர்கள் பொற்பாதத்தில் பணிந்து நன்றியுடன், ஒரு சாமானியனின் உறுதிமொழி... பாதை தவறி பல தவறுகள் செய்தாலும் - ஐயா குஜராத் கண்ணீர் துடைக்க குமரி கை நீட்டும் குமரி கடல் கோளுக்கு காஷ்மீர் கண் கலங்கும் இந்த உணர்வில் ஒற்றுமை இன்று இல்லை என்றும் நிலைக்கும் என்று கைலாய மலை வாழும் எங்கள் இராணுவ சிங்கங்களுக்கு சத்தியம் செய்து சமர்பிக்கிறேன்!