Posts

Showing posts from March, 2021

கோவில்களை மீட்போம்

நம் மருத்துவத்தை அழித்தான் பொறுத்திருந்தாய் நம் கலைகளை அழித்தான் பொறுத்திருந்தாய் நம் மொழியை அழித்தான் பொறுத்திருந்தாய் நம் உணவுமுறையை அழித்தான் பொறுத்திருந்தாய் நம் உறவுமுறையை அழித்தான் பொறுத்திருந்தாய் நம் வாழ்வியலை அழித்தான் பொறுத்திருந்தாய் நம் இலக்கியங்களை அழித்தான் பொறுத்திருந்தாய் கிளைகளை அழித்தவன் இன்று.... ஆனி வேருக்கே வந்துவிட்டான் நம் அடையாளத்தை அழிக்கிறான் பொறுத்தது போதும் பொங்கி எழு தமிழா.. கோவில்களை மீட்போம் இழந்தவை மீட்போம்

நன்றியுடன்

உடல் பற்றாள் உயிர் மறந்து சிவம் மறந்து உணர்விழந்த மாக்கள் எம்மை பாடச்சொன்னாய் ஆடச்சொன்னாய் ஆடச்சொன்னாய் ஆடிக்கொண்டே இருக்கச் சொன்னாய் ஆடினோம்‌ ஆடினோம் ஆடிக்கொண்டே இருந்திருந்தோம் உடலுணர்வை உயிர் மறந்து வெளியேறும் நிலை தொட்டும் ஆடினோம் ஆடினோம் ஆடிக்கொண்டே இருந்திருந்தோம் நடுஇரவு பாதி உயிர் உடலுடன் மீதி உயிர் இறையுடன் தியானம் சொன்னாய் நாங்கள் செய்தோம் உடல் களைப்பில் வெளியேற துடித்த உயிர் ஒரு கணப்பொழுதில் சிவன் உணர நானும் சிவமாகி இருந்தேன் சில பொழுது சித்தனாக எத்தனித்து எத்தனையோ உயிர்கள் பித்தனாகி போனதுன்டு கடும் தவமில்லை பட்டினியில்லை துறவறமில்லை தலைகீழாய் தொங்கவுமில்லை கொடும்தீயில் நிற்கவுமில்லை எம் வழியில் நீ வந்து சிவமுணர வகைசெய்தாய் ஈசாவை தந்த சத்குருவே உனை காணும் பொழுதெல்லாம் கை கூப்பி நிற்கின்றேன் நீ கடவுள் என்பதற்காக அல்ல என்னில் கடவுள் செய்தாய் என்பதற்காக.