Posts

Showing posts from 2022

மண் காப்போம்

வராரு வராரு என் குருவே வராரு உலகம் சுற்றி வராரு உத்தமரு மகானு நூறு நாள் வண்டியில தனியாளா வராரு தரனி மக்கள் உள்ளத்தை தனதாக்கி வராரு மண்ண காக்க மன்னர்களையெல்லாம் பார்த்து பேசி வராரு மலடான மண்ணை யெல்லாம் மீட்க சொல்லி வராரு நம் சந்ததி வாழ நல்ல வழிய சொல்லிகிட்டுதான் வராரு நாளை வரும் பேரிடரை முன்னே சொல்லி வராரு (வராரு) கோடி‌கோடி ஆண்டுகளாய் கோள்களின் மேல் மண்ணது  இயற்கையின் சுழற்சியால் வளமான சொத்தாணது பாவி மக்கா நம் இனமே அதை  தப்பாக பாவித்தது மொத்தமும் வீணாச்சே சத்து இல்லா மணலாச்சே நாம் உண்ணும் உணவுதுதான் நேற்று போல் இன்றில்லை உண்மையில் ஒன்ன சொன்னாக்கா நாளை அதுவும் இல்லை நாம்  விழித்து கொள்ள  நேரமிதுதான் மானிடரே இத்தனையும் இங்கு  நீயும் நானும்தான் புரிந்து கொள்ள வேண்டுமுன்னு தன் உடல் வருத்தி  ஊர் நன்மை நிருத்தி மக்கள் சாமி வராரு.  (வராரு) காயி கறி கணி வகைகள் உயிர் இல்லா வெருமுடலு வயல்களில் மண்ணதுவோ செயற்கையால் நஞ்சானது ஐந்து சதம் கரிமவளம்  முன்பெல்லாம் இருந்ததய்யா புள்ளி மூணு தானிருக்கு  இப்போ மண்ணு இல்ல மணலு அய்யா மண்ணில்புழு இல்லை  பொன்வண்டும் அங்கில்லை  வயல்வெளியை பார்த்தாக்கா நுண்ணுயிர்கள

மண்ணின் கதை

பூமியோட future பத்தி சொல்ல போறேன் Shocking செய்தி என்ன செய்தி நா சொல்றேன் கேளு bro பூமியோட future பத்தி சொல்ல போறேன் Shocking செய்தி மண்ணு எல்லாம் dummy ஆச்சு Carbon இல்லா காடாய் போச்சு நீயும் நானும் வாழ நல்ல வழியில்லை மாமு Nextu Generationukum இது ஆபத்து மாமு நாம என்ன பன்னுறது நம்ம வாழும் பூமி காக்க சொல்ல போறேன் Super சேதி Dummy ஆண‌ மண்ண‌ மீட்க  Greenis ஆக மாத்தி காட்ட Save Soil இயக்கம் இருக்கு அதில் சேர்ந்திடு மாமு கூடவே நம்ம சொந்தங்களையும் இதில் சேர்த்திடு மாமு Save soil baby மண் மணலாய் போனால் எல்லாம் worstu மணல் மண் ஆனா அது தான் Bestu Hey. Hahaha வளமை போணால் வாழ்வே போச்சு உயிரே இல்லா உடலுமாச்சு நம்முடைய தலைமுறை இதை மாத்தனும் மாமு சட்டங்கள் போட சொல்லி கேட்கணும் மாமு விஞ்ஞானம் சொல்லுறத விளக்கனும் மாமு மெய்ஞான குருவின் வழி நடக்கனும் மாமு நீயும் நானும் வாழ நல்ல வழியில்லை மாமு Nextu Generationukum இது ஆபத்து மாமு மக்கா.. ( பூமியோட)

தருணம்

நம் வாழ்வை தந்த    மண்ணின் குரலை செவிகள் கேட்கிறதா உடலும் உயிருமான    மண்ணை மனமும் உணர்கிறதா அந்த மலைகள் மரங்கள்    கொடிகள் செடிகள் குரலும் கேட்கிறதா அவை அழிவின் விளிம்பில்   தவிக்கும் தவிப்பை நம்  மனிதம் உணர்கிறதா இதுவே தருணம் கேளு மனமே இயல்பில் இணைந்து விடு முழு வாழ்வான மண்ணின் வளத்தை காக்க உறிதியெடு நீ காக்க உறிதியெடு. நீர் நிலைகளும் பல உயிர்களும் இங்கு நீள வேண்டாமா பெரு வலியின்றி நம் குழந்தைகள் இங்கு வாழ வேண்டாமா கேளு மனமே இதுவே தருணம் உணமை உணர்ந்து விடு பெரு வாழ்வை தந்த மண்ணின் வளத்தை காக்க உறிதியெடு மண் காத்திடு உன்னில் மலர்ந்திடு மண் காத்திடு உலகை மீட்டெடு

மண் காப்போம்

Image
ஒத்த வண்டியில மொத்த உலகுக்கும்  நன்மை செய்திட போறானே என்னில் தெய்வம் செய்த குரு மண்ணை காத்திட உலகம் சுற்றி வர போறானே முப்புரம் அழிக்கும் சிவனையறிவோம் இங்கு காக்கும் ஜீவனை பாருங்கள் கண்ணை மூடியே கைகள் கூப்பியே அவன் பாதம் தொடர்ந்திட வாருங்கள்

Conscious Planet - 1

மண்‌ மாறி போச்சே மலடாக்கி யாச்சே மண்ணோடு ‌வாழ்ந்த வாழ்க்கை மாறிடுச்சே மண் மணலு மாகிடுச்சே உயிரில்லா மணல் வெளியில்  வாழ்வது சாத்தியமா சொல் உண்மையை‌ உணரு மீண்டெழ முயலு மரபின்றி பயிர் ‌செய்தாய் வரம்பின்றி மரம் கொய்தாய் உயிரின்றி வாழ்கின்றாய் உணர்வின்றி வீழ்கின்றாய் மணல் மீட்டு மண்ணாக்கு உடலோடு உயிர் ஊற்று எதிர்காலம் வளமாக்க ஆள்வோர்க்கு வழிகாட்டு

Conscious Planet

Image
பசுமை போர்த்தி பல்லுயிர் கொண்டு டீன்ஏஜ் பெண்ணாய் குளுமை தந்து விந்தை செய்த இப் பூமி பந்து அரைகுறை மனிதன் பாதம் பட்டு கார்பன் இல்லா காடாய் ஆச்சு Software இல்லா கணினியாச்சு Virus பார்த்தே  வளர்ந்த மனிதா Viral ஆக எதிர்வினை ‌யாற்று - பூமி Recover ஆக உன் அக்கறை காட்டு

தை பொங்கல் 2022

Image
கொரோனா வந்து போச்சுடா - தமிழ் நேசா  டெல்டாவும் வந்து போச்சுடா  வந்து போன சங்கடங்கள் வெரும் சம்பவமாய் மாறி போக  ஒமிக்கிறானும் வந்து நிக்குது நம் வாழ்வதையும் முடக்கி வைக்குது கண்ணுக்கு தெரியாத கிருமிகளால்  நம் வாழ்வதுவும் முடங்கிடுச்சு இயற்கை தன் இயல்பிற்கு அழகாக மீண்டுகிச்சு மண் வளமும் நீர் வளமும் வான் பொழியும் மழை வளமும் உயர்ந்து நிற்கும் மலை வளமும் உயிர் காக்கும் வளி வளமும் ஒற்றை செல் உயிருக்கும் ஒற்றைக்கால் மரத்துக்கும் பறக்கின்றன பறவைக்கும் ஊர்ந்து செல்லும் புழுவிற்கும் நான்கு கால் விலங்கிற்கும் மனிதா அது பொது வன்றோ அதை நீ உணர்வதுவும் நன்றன்றோ இவ்வண்டமே உனதென்று உரிமை நீ எடுத்துக் கொண்டால் மனிதனென்ற ஒரு விலங்கு இருந்ததாக ஆய்வு செய்யும் எதிர்காலம் தை மாத பிறப்பின்று  மனிதா நீ மாறிவிடு மீண்டும் இயற்கையதை கெடுக்காமல் இருக்கவிடு இன்று பொங்கல் கொண்டாடு தினமும் இயற்கையை கொண்டாடு. அனைவருக்கும் தை திருநாள் வாழ்த்துக்கள்.