Posts

Showing posts from 2010

64வது சுதந்திர தினம்

பார்க்கும் இடத்தில் குப்பை போட்டு நின்ற இடத்தில் எச்சில் துப்பி ஜாதியின் பேரில் சண்டைகள் போட்டு மாநிலங்களுக்கிடையில் பிரச்சினை கிளப்பி லட்சம் தந்தே வேலையை முடித்து அந்நிய பொருளை நாளும் வாங்கி வாழ்நாள் முழுவதும் சொகுசாய் வாழ்ந்து - நாங்கள் நாட்டின் அமைதியை நாளும் குலைத்தாலும் எங்கள் தவறுகளையெல்லாம் குழந்தையின் குறும்புகளாய் மன்னித்து... காஷ்மீர் மலையில் கொட்டும் பணியில் நடுங்கும் குளிரில் நம் தாயகத்தை காக்கும் நாயகர்கள் பொற்பாதத்தில் பணிந்து நன்றியுடன், ஒரு சாமானியனின் உறுதிமொழி... பாதை தவறி பல தவறுகள் செய்தாலும் - ஐயா குஜராத் கண்ணீர் துடைக்க குமரி கை நீட்டும் குமரி கடல் கோளுக்கு காஷ்மீர் கண் கலங்கும் இந்த உணர்வில் ஒற்றுமை இன்று இல்லை என்றும் நிலைக்கும் என்று கைலாய மலை வாழும் எங்கள் இராணுவ சிங்கங்களுக்கு சத்தியம் செய்து சமர்பிக்கிறேன்!

பாலைவனம்

இங்கே... பூமிக்கு பச்சை வர்ண ஆடை இல்லை தடை இன்றி வழிந்தோட நீரும் இல்லை ஜீவன் நின்று இளைப்பாற நிழலுமில்லை மனிதன் விரும்புகின்ற அளவிற்கு எதுவும் இல்லை ஆனால்... மனிதனை பாலைவனம் வெறுக்கவில்லை சூடான சூழ்நிலையில் வாழ துடிக்கும் நீருற்றை தன்னுள்ளே சேர்த்து வைக்கும் மணல் மேட்டில் நடப்பதற்கு ஏற்றவாறு கால்களெல்லாம் நீளமாக கொண்டிருக்கும் ஒட்டகத்தின் வாழ்க்கையிலே பாலைவனம் - அது எப்போதும் ஒட்டகத்தின் சோலைவனம் வாழ்க்கையிலே சில விஷயம் இதுபோலத்தான் தனக்குள்ளே எதிர் எதிராய் அமைந்துவிடும் நமக்குள்ளே புதிர் புதிராய் விடுத்துவிடும் நம்மையும் சதிராட வைத்துவிடும்

காமராஜர்

Image
சிவகாமியின் செல்வன் - புது சிந்தனையின் தலைவன் கல்வி தந்த முதல்வன் - அவன் கலைவாணி தந்த தமிழன் தன் பெயர் விளக்கம் பொய்யாக்கி புது விளக்கம் தனதாக்கி தரணியிலே வாழ வந்த தவ புதல்வன் ஏழைகளின் உறவாகி, குழந்தைகளின் குருவாகி தமிழருக்கு ஏற்றம் தந்த முதல்வன் - அவன் கல்வி சாலை தந்து, மதிய உணவு தந்து, தொழில் கூடம் தந்து, வாழ்வில் ஏற்றம் தந்தான். நெஞ்சில் வீரம் கொண்டு, செயலில் தீரம் கொண்டு, சொல்லில் நேர்மை கொண்டு, பகைமை எல்லாம் வென்றான். காமராசன் என பெயர் கொண்டான் கடமை; கண்ணியத்தை உயிர் கொண்டான் பார் ஆள வந்த வாய்ப்பினையும் கண் பாராமல் விளக்கி விட்டு தமிழருக்காய் வாழ்ந்து - இன்றும் தமிழரிலே வாழுகிறான்.