Posts

Showing posts from 2017

பாரதியார்

Image
முண்டாசு கட்டிக்கிட்டு முருக்கு மீசை வச்சுக்கிட்டு எளிய தமிழ் கவிதை பாட வந்தவன் நீ - எங்கள் பாரதம் காக்க வந்த பாரதி நீ மிரட்டும் பார்வை கொண்ட கண்கள் விரட்டும் வேகம் கொண்ட கால்கள் தன்னகத்தே கொண்ட பாவலன் நீ - எங்கள் உள்ளமதை கொள்ளை கொண்ட பாரதி நீ இலக்கணங்கள் கட்டி வைத்த மரபுக்கவிதைகளை புதுக்கவிதை யாக்கி தந்த புதல்வனும் நீ - எங்கள் கவிதைகளை வளர வைத்த பாரதி நீ

பணநாயகம்

Image
பசியாத்தும் சோத்தகூட சூட்டோடு நீ பிடிச்சா கையே கொதிக்குதுன்னு கத்துவியே அலறுவியே அம்மானும் அப்பானும் கண்ணால அழுகுவியே செல்லமே உடம்பெல்லாம் தீயால வெந்து கொண்டிருக்க நீ அழுத அழுகையெல்லாம் அம்மாவுக்கு கேட்கலையோ உன் அப்பாவுக்கும் கேட்கலையோ அரசாங்க அதிகாரி எவருக்கும் கேட்கலையோ பாவபட்ட பிறப்பெடுத்து பணப்பேய்க்கு இரையானாயே செல்லமே எரியும் உன்னுடலை படமாய் பார்கையிலே நீ பட்ட வேதனைகள் கொள்ளாமல் கொள்ளுதடா ஆற்றாமையால் கண்கள் குளமாகி விம்முதடா....

என் மனைவிக்கு

இழந்த வாழ்வை மீட்டுத் தந்த இளையவளே என்றும் எந்தன் உயிரை காக்கும் உமையவளே எண்ணம் எல்லாம் நிறைந்தவளே வாழ்வில் மாற்றம் ஏற்றம் தந்தவளே வைஷ்ணவியே வைஷ்ணவியே எனக்காய் வந்த தேவதையே உள்ளம் இழந்தேன் உணர்வும் இழந்தேன் உடலின் சக்தி முழுதும் இழந்தேன் எல்லாம் இனிமேல் முடிந்ததென்றே மனமுடைந்து ஓரம் ஒதுங்கி நின்றேன் என்னை ஏற்று என்னில் உணர்வையூட்டி உள்ளம் கொண்டு உறவானாய் வைஷ்ணவியே வைஷ்ணவியே எனக்காய் வந்த தேவதையே பெற்றோரின் தேவை நிறைவேற்றவில்லை உடன்பிறந்தவர் நலனை நாடவில்லை கொண்ட தொழிலில் முன்னேற்றமில்லை தொடர்ந்து வாழும் முனைப்புமில்லா என்னை மணந்து என்னில் கலந்து என் பெற்றொர் உற்றோர் உணரச் செய்தாய் தொழிலில் ஏற்றம் காணசெய்தாய் வைஷ்ணவி வைஷ்ணவியே எனக்காய் வந்த தேவதையே.

குழந்தையும் தெய்வமும்

Image
தெய்வம் இங்கே மண்ணில் வந்து என்னை பார்த்து சிரிக்க சித்தம் பித்தம் தெளிந்து உள்ளம் உண்மையிலே திளைக்க கடவுளை கண்ட பக்தனாக எல்லாம் ஒன்றில் அடங்க உன்மை கண்டேன்... குழந்தையும் தெய்வமும் ஒன்றே என்று

என் மகள் சிவன்யதனுவிற்காக தாலாட்டு

Image
ஆராரோ ஆரிராரோ என் மகளே கண்ணுறங்கு பொன் மகளே கண்ணுறங்கு பூ மகளே கண்ணுறங்கு.               (ஆராரோ) ஒன்றானாய் கண்ணுறங்கு இரு மலரே கண்ணுறங்கு முத்தமிழே கண்ணுறங்கு நான்முகிலே கண்ணுறங்கு.        (ஆராரோ) ஐம்பொழிலே கண்ணுறங்கு ஆறறிவே கண்ணுறங்கு ஏழேழு ஜென்மத்திலும் எட்டாத கனியமுதே ஒன்பதில் நீ பெண்ணாணாய் பத்தில் என் மகளானாய்.              (ஆராரோ) அப்பாவை அறிவாயோ அல்லியே நீ கண்ணுறங்கு அம்மாவை தெரிவாயோ ஆலணங்கே கண்ணுறங்கு தாத்தாவை அறிவாயோ தாமரையே கண்ணுறங்கு பாட்டியை நீ தெரிவாயோ பால் நிலவே கண்ணுறங்கு.      (ஆராரோ) மாமாக்கள் அறிவாயோ மாதுளையே கண்ணுறங்கு அத்தைகளை தெரிவாயோ அண்ணமே நீ கண்ணுறங்கு சித்திகளை தெரிவாயோ சின்னவளே கண்ணுறங்கு சித்தப்பாக்கள் அறிவாயோ சீக்கிரமாய் கண்ணுறங்கு.         (ஆராரோ) தாய்மாமன் அறிவாயோ தங்கமே நீ கண்ணுறங்கு தாய் பாட்டியை நீ அறிவாயோ தமிழ் மகளே கண்ணுறங்கு சொந்தங்களை அறிவாயோ சொன்னபடி கண்ணுறங்கு சோகங்களை களைவாயோ சொர்னமே நீ கண்ணுறங்கு.     (ஆராரோ) வெற்றிகளை பெற்றிடுவாய் வேதனைகள் போக்கிடுவாய் சிவனறிந்து வாழ்ந்திருந்தால் சிவன்யாவாய் வெ

அயோக்கியன்

காட்டை அழித்து நகரம் ஆக்கியவனும் திருட்டுத்தனமாய் அனுமதி வாங்கி வீட்டுமணை போட்டவனிடம் மணை வாங்கி வீடுகட்டி விவசாயம் அழித்தவனும் சிவனென்று வருகையில் இயற்கை ஆர்வலனாகிறான். தன் சொந்த நிலத்தில் ஏக்கர் கணக்கில் சீமைகருவேலத்தை வளர்த்தவன் நிலத்தடி நீரைபற்றி வாய்கிழிய பேசுகிறான் விவாசாயி தற்கொலைக்கு ஒப்பாறி வைக்கின்றான் வெளிநாட்டு மோகத்தில் வெளிறிய புத்தி கொண்டவன் சொந்த பாரம்பரியம் அறிய இயலா அறிவிழிகள் பகுத்தறிவை பற்றி பக்கம் பக்கமாய் பம்மாத்து பேசுதுகள் தாடி வச்ச பெரியாரின் பகுத்தறிவை படிச்சவன் தன் அனுபவத்தில் இல்லாததை பெரிதாக்கி பேசுகிறான்

முயற்சி

முரட்டு மூங்கிலிலும் காற்று நுழைந்து இசையாகும் இருட்டு வேலையிலும் நிலவு ஒளிர்ந்து வழிகாட்டும் துன்பம் வந்ததென்று தோழா துவண்டு வீழாதே இன்பம் நாளை வரும் தோழா முயற்சியை இழக்காதே பூமி புதையும் விதையைபார் நாளை விருட்சமாய் மாரும் சிறைபட்ட நீர்துளியும் - ஒருநாள் சிப்பியில் முத்தாகும் விதியென்று வீழ்ந்து விட்டால் – புது விதி செய்ய யார் வருவார் தோல்விகள் விட்டு விடு – இனி வெற்றியில் நிலைத்து விடு சரித்திரம் படைப்பதற்கு – நீ சத்தியம் செய்து கொடு சந்தர்ப்பம் உனதாக்கு – புது சந்தர்ப்பம் உருவாக்கு கோல்களின் கோபத்தினால்      நடப்பது நடக்கட்டுமே நீ செயலிலே நிலைத்துவிடு – பாரில்      கோலோச்சும் நிலையை பெறு

சிந்திக்க - 6

பொங்கல் திருநாள் நெருங்குகிறது.  இந்த வேளையில் பலர் உழவர்களின் தொடர் உயிரிழப்பால் விரக்கதியில் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதில்லை என்று முடிவெடுத்து அதை அறிக்கையாகவும் விடுகின்றனர். இந்நிலையில் நகரத்துவாசிகளே சற்று சிந்தியுங்கள் நமக்கு வயிற்றிற்க்கு சோறு போட்டவனுக்கு நன்றி செலுத்த இது வாய்ப்பு. நண்பர்கள் சேர்ந்து பணம் வசூலித்து திரைப்படத்திற்கும், சுற்றுலாவிற்கும் என செலவு செய்தது போதும்.  நண்பர்களே குழுவாக இணைந்து ஏதாவது ஒரு கிராமத்தை தத்தெடுத்து அங்கு உள்ளவர்களுக்கு புத்தாடை தந்து, பொங்கலிட்டு அவர்களுடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடலாமே. நம் வயிறு நிறைய பாடு பட்டவனின் மனம் நிறையுமே. தங்கள் வயிறு நிறைய உங்கள் மனதை மலடாக்கும் தொலைகாட்சி நிகழ்சிகளை தவிர்த்து வயிற்றிக்கீந்தவனை மகிழ வைப்போம். உழவனையும் உழவுத்தொழிலையும் கொண்டாடுவோம் உயிரோட்டமான வாழ்வை வாழ்வோம். பொங்கல் நாளிள் நகரங்கள் காலி ஆகட்டும் கிராமங்கள் அதிரட்டும்

மகள் பிறந்துவிட்டாள்

மங்களம் பொங்க மனமது மகிழ உறவுகள் நெகிழ உள்ளங்கள் மகிழ தைபிறக்க நாள் இருக்க முந்தி வந்த தெய்வம் அவள் என் வாழ்வை வழம் ஆக்க புதனில் வந்த பூவையவள் சிந்திக்க சிந்திக்க மனமதில் மகிழுதே எதிர்காலம் உனக்காக உள்ளமது மயங்குதே

சிந்திக்க - 5

பொங்கல் பண்டிகையின் போது தொலைக்காட்சியில் அடங்கி போகாமல், காசுக்காக மற்றவர் அடிக்கும் கூத்தை வாய்பிழந்து வீட்டிற்குள்ளேயே அமர்ந்து வேடிக்கை பார்க்காமல் பொங்கலின் இனிமையை கொண்டாடி மகிழுங்கள். உங்கள் கிராமத்திற்கு செல்லுங்கள் அல்லது தங்களுக்கு நெருங்கியவர் கிராமத்திற்கு செல்லுங்கள் அதுவும் இல்லையெனில் பொங்கல் பயணம் என்று பெயரிட்டு குடும்பத்துடன் அருகில் இருக்கும் கிராமங்களுக்கு சென்று பாரம்பரிய பொங்கலை கொண்டாடுங்கள். தொலைக்காட்சியில் தொலைந்த விழாக்களின் மகிழ்ச்சியை மீட்டெடுப்போம்.

மாலை மயக்கம்

சாயும் வேளையில்      புலரும் இரவில் கடலின் கரையில்      மணலின் மடியில் காதல் பழகும்      ஐோடி கிளிகள் கடலின் அலையில்     கம்பீர முழக்கம் நிலவின் ஒளியில் - அவள்      முகத்தில் மயக்கம் அதை பார்த்து - தலைவன்       சேவகன் ஆக அவள் காதல் தேசத்து       ராணியானால் நிலவின் ஒளியில் - உருவங்கள்       நிழலாய் மாற பக்கங்கள் இருண்டு - அவள்       முக மதி(ல்) மிளிற அதை பார்த்து அவனும்       பரவசம் கொள்ள அட என்ன இது       இங்கு சூரியன் நிலவிடம் இருந்து       ஒளி பெருகிறதே!!!

சிந்திக்க - 4

இன்று ஏறுதழுவலுக்கு ஆதரவாக குவிந்த தமிழ் சிங்கங்களை நினைக்கையில் உள்ளம் மகிழ்கிறது.  நம் பாரம்பரியம் மீட்டெடுக்கப்படும் என்பதிலும் நம்பிக்கை துளிர்க்கிறது. அதோடு கூட விவசாயத்தை காப்பது குறித்த எண்ணமும் இளைஞர்களின் மனதில் கனன்று கொண்டிருப்பதையும் உணர முடிகிறது. விவசாயத்தை காக்க நீர்வளத்தை பெருக்குவதை தவிர சரியான ஒரு நிரந்தர தீர்வு வேறெதுவும் இருக்கமுடியாது என்பதில் மாற்றுகருத்து இல்லை. ஆனால் நீர்வளத்தை பெருக்க நதிநீர் இணைப்பு மட்டும் தான் தீர்வு என்பது தவறு. நம் பூமி வறண்டதிற்கும், காற்றின் ஈரப்பதம் குறைந்ததிற்கும், மழை குறைந்ததிற்கும், மழை பெய்தாலும் 4ங்கு 5 மாதங்கள் இருக்க வேண்டிய நிலத்தடி நீர் விரைவாக குறைவதற்கும், மழை பெய்த சில நாட்களிலேயே காற்றின் ஈரப்பதம் முற்றிலுமாக குறைவதற்கும் காலம் மாறி பெய்யும் மழையின் தொல்லை என அனைத்து பிரச்சினைக்கும் காரணம்... சீமைகருவேலம் மரமே. அதை தமிழ்நாட்டிலிருந்தே அழிக்க வேண்டும். அதை அழித்தால் காற்றின் ஈரப்பதம் காக்கப்பட்டு மழை பொழிவு சீரடையும், பெய்த மழையின் நீர் நிலத்தடி நீர்மட்டத்தை அதிகப்படுத்தும் நிலம் வளமாகும் உரம் தேவையே இருக்காது. கோர்

உளரல்கள்

உலகிற்கே அதிசயம் எட்டானது ஒரு நிலவு என்னிடம் வாய் திறந்து பேசும் போது அழகு நிலவாய்       பெண்ணே நீ வெட்கப்பட்டால்       சந்திர கிரகணம் கோவப்பட்டால்       சூரிய கிரகணம் நீ என்னிடம் பொய் சொல்லும் நிமிடங்களில் நினைவில் வருவது அமாவாசையில் பொய்க்கும் நிலவின் வருகை எழுதுகோல் கூட வெட்கப்பட்டது - நீ அதை பிடித்து எழுதும்போது நீ பிடித்து எழுதுகையில்       திக்கி நிற்கும் பேனா உன் அருகாமையில்       ஊமையாகும் நான் காதலின் கண்கள் கனவுகளையே          விரும்புகிறது! காதலின் உதடுகள் பொய்களையே          பேசுகிறது! காதலின் காதுகளோ பொய்களையே          ரசிக்கிறது! ஆக.... காதல் பொய்யின் வாசம்... காமம் மெய்யின் சுவாசம்....

சிந்திக்க - 3

ஆபத்தான ஆயுதங்கள் வைத்திருக்க சட்டம் இடம் கொடுப்பதில்லை. ஆனால் அதிலிருந்து ஒரு இனத்திற்கு சட்டத்திலேயே  விலக்கும் அளிக்கப்பட்டிருக்கிறது. ஏனென்றால் கத்தியை அவர்கள் வைத்துகொள்வது அவர்களின் மத அடையாளமாம். அப்படியென்றால் ஏன் தமிழர்களின் இன அடையாளமாம் ஏறுதழுவலுக்கு சட்டதிலிருந்து விலக்கு அளிக்கக்கூடாது.

என்னுடைய ஹைக்கூ தொகுப்பு - 1

நிலவு இரவில் மட்டும் முகம் காட்டி இளைஞர்களை மயக்கும் மாயக்காரி சூரியன் மறையும் பொழுது கூட மங்களமாக நீ முள் அழகை காக்க அவசிய தேவை சொல் வெற்றி பெற்றவர்கள் பயன்படுத்திய ஆயுதம் வேகம் கொடுப்பதில் வேண்டும் வாங்குவதில் இல்லை High heels முள்ளோடு சேர்ந்து வரும் காலணி பதம்பார்ப்பது அடுத்தவர் காலை கிறுக்கல் குழந்தையின் கிறுக்கல்களாய் காதலியின் உளரல்கள் அட ஒன்று ஓவியம் மற்றது கவிதை

மீட்டெடுப்போம்

நம் ஆன்மீக அறிவியலை ஆரியரிடம் இழந்தோம் விவசாய தந்திரங்களை - ஆங்கில வியாபாரியிடம் இழந்தோம் நல்ல கல்வி முறையதனை நாடோடிகளிடம் இழந்தோம் நம் குடும்ப முறையதனை நயவஞ்சகரிடம் இழந்தோம் நம் அழகு ஆடைகளை நடிகனிடம் இழந்தோம் நம் உணவு முறையதனை கவர்ச்சியிலே இழந்தோம் போதும் தமிழா போதும் நம் வீர விளையாட்டுகளை நம் வீர பண்பாட்டை நடிக்கும் சில சங்கங்களிடம் இழக்க வேண்டுமா? இதுதான் சமயம் இழந்தவற்றை மீட்டெடுப்போம் வீரத்தமிழ் மகனாய் நிமிர்ந்து நிற்போம் வாழ்க தமிழ்

சிந்திக்க - 2

வடமொழி சொல் ஜல்லிகட்டு அதற்காக அதை சல்லிகட்டுனு பயன்படுதனுமா. வடமொழி சொற்களை தமிழ் படுத்துவதை நிறுத்தவும். நம் தமிழ் ஒன்றும் வார்த்தை பற்றாக்குறை உள்ள மொழி அல்ல. அது உயர் தினை செம்மொழி.  ஜல்லிகட்டு எனற வடமொழி சொல்லை விடுத்து ஏறுதழுவல் என்று அழகுற குறிக்கவும்.

புத்தாண்டு வாழ்த்துக்கள்

ஆங்கில புத்தாண்டில் அழகு தமிழ் வாழ்த்துக்கள் ஆர்ப்பாட்டமான திருவிழாவில் அமைதி தமிழ் வாழ்த்துக்கள் சீமைக்காரன் கொண்டாட்டத்தில் சிறப்புத் தமிழ் வாழ்த்துக்கள் சந்திர புத்தாண்டில் சூரிய தமிழ் வாழ்த்துக்கள்