Posts

Showing posts from May, 2009

காதல் பூக்கள்

சினிமா காதல் சிரிக்கின்றார் நம் இளையோர் காதலை எரிக்கின்றார் உள்ளம் இரண்டாய் வாழ்கின்றார் உண்மை மறந்து வீழ்கின்றார் சதிகள் செய்தோர் வாழ்கின்றார் சாதிகள் சொல்லி பிழைக்கின்றார் இதனை அறியா மனிதரெல்லாம் மாக்களாகி மடிகின்றார் அத்திப் பூவாய் இவர் நடுவில் ஒரு மனிதன் வந்து பூத்தாலும் சுத்தி உள்ள முள் மனங்கள் - அவனை குத்தி குத்தி அழிக்கிறதே மூன்று கண்ணை கொண்டவனே அதர்மம் அழிக்க துடிப்பவனே உன் மூன்றாம் கண்ணை திறந்துவிடு அதன் அனலில் மாக்களை அழித்துவிடு சக்தியை பாதியாய் கொண்டவனே ஆனந்த தாண்டவம் செய்தவனே உன் கருணை கொண்ட பார்வைக்குள் இந்த காதல் பூக்களை வாழவிடு

அரங்கேற்றம்

என் காதல் துளி உன்னில் விழுந்து முத்தாய் ஆனதடி என் காதல் காயும் உன்கைவிரல் பட்டு கனியாய் ஆனதடி என் காதல் மொட்டு உன் கண்ணொளி பட்டு பூவாய் மலர்ந்ததடி என் காதல் வாசம் உன்னால் இன்று காற்றில் மணக்குதடி என் காதல் விதையும் உன் மனதில் பதிந்து விருட்சம் ஆனதடி என் காதல் பாலை உன்னால் இன்று சோலை ஆனதடி என் காதல் கவிதை உன்னால்தானே அரங்கம் ஏறுதடி

அழிவதும் பெண்ணாலே

உளியாக வந்தாயே - பெண்ணே; சிலையாக்காமல் என்னை சிதையாக்கிச் சென்றாயே!

ஆவதும் பெண்ணாலே

நித்தமும் உன்னால் சித்தம் கலங்கி நான் பித்தனாக ஆகின்றேன் என் பித்தம் தெளிந்து புத்தன் ஆக உன் சித்தம் வேண்டும் பத்தினியே