முயற்சி
முரட்டு மூங்கிலிலும் காற்று நுழைந்து இசையாகும் இருட்டு வேலையிலும் நிலவு ஒளிர்ந்து வழிகாட்டும் துன்பம் வந்ததென்று தோழா துவண்டு வீழாதே இன்பம் நாளை வரும் தோழா முயற்சியை இழக்காதே பூமி புதையும் விதையைபார் நாளை விருட்சமாய் மாரும் சிறைபட்ட நீர்துளியும் - ஒருநாள் சிப்பியில் முத்தாகும் விதியென்று வீழ்ந்து விட்டால் – புது விதி செய்ய யார் வருவார் தோல்விகள் விட்டு விடு – இனி வெற்றியில் நிலைத்து விடு சரித்திரம் படைப்பதற்கு – நீ சத்தியம் செய்து கொடு சந்தர்ப்பம் உனதாக்கு – புது சந்தர்ப்பம் உருவாக்கு கோல்களின் கோபத்தினால் நடப்பது நடக்கட்டுமே நீ செயலிலே நிலைத்துவிடு – பாரில் கோலோச்சும் நிலையை பெறு