Posts

Showing posts from 2011

ஊருக்கு போறோம்

ஊரூரா போறோம் நாங்க ஊரூரா போறோம் உலகறிய போறோம் நாங்க உலகாள போறோம் அழகாக பாட்டுப் பாட குயிலே நீங்க வாங்க ஜோராக ஆட்டம் போட மயிலே நீங்க வாங்க காடு, மலை அத்தனையும் நடந்து பார்க்க போறோம் கடல் நீளம், அதன் ஆழம் நீந்தி பார்க்க போறோம் பூமியதன் எல்லை வரை ஓடி பார்க்க போறோம் எவரெஸ்டின் உச்சி வரை ஏறி பார்க்க போறோம் வானவில்லின் நிறம் எடுத்து மயிலிறகை அதில் நனைத்து உலகழகை ஓவியமாய் வரைந்து பார்க்க போறோம் சிறுத்தையதன் வேகத்துடன் போட்டி போட போறோம் மானைப்போல் குதித்தோடி மகிழ்ந்திருக்க போறோம் யானையதன் முதுகேறி பயணம் பண்ண போறோம் குரங்கைப்போல் மரம் தாவி குதூகலிக்கப் போறோம் கொட்டுகின்ற அருவியிலே சிதறும் நீர் முத்தெடுத்து தொடுத்த அம்மாலையினை அணிந்து பார்க்க போறோம்

புதிய பாடல்

புத்தம் புது மொட்டுக்கள் – நாங்கள் வனத்தில் திரியும் சிட்டுக்கள் வண்ண வண்ண சிந்தனைகள் – தன் எண்ணம் கொண்ட பட்டுக்கள் திட்டம் போட்டு சட்டம் போட்டு சாதனை செய்ய வந்திடுவோம் எட்டும் வரை ஏறிடுவோம் வானம் முட்டும் வரை வாழ்ந்திடுவோம் அதிகாலை வேளை பனி படர்ந்த சோலை மரம் அமர்ந்து குயில்கள் கவிபாடும் வேளை உடல் தீண்டும் தென்றல் உயிர் தூண்டிச் செல்ல தன் நிலை மறந்து மனமும் வானம் வரை செல்ல உடம்புக்குள் புது சிலிர்ப்பு, உயிருக்குள் ஒரு சிரிப்பு சொல்ல ஒரு வார்த்தை இல்லை – இதை விட்டுச் செல்ல மனமுமில்லை புல் வெளியே மேடை, இலையசைவே தாளம் மெட்டுக்கட்டிப் பாட இதுவே நல்ல நேரம் ஓடிவரும் ஓடை, இதழ்பூத்து நிற்கும் பூக்கள் எம்மை பார்த்து சினுங்க எங்கள் மனமும் அதனில் மயங்க பாட்டு ஒன்னு கட்டி விட்டோம் அதை பாடி பாடி மகிழ்ந்திருப்போம் உயிர் சூட்சுமத்தை உணர்ந்து விட்டோம், உயிர்களுக்காய் வாழ்ந்திவோம்