மண் காப்போம்

வராரு வராரு
என் குருவே வராரு
உலகம் சுற்றி வராரு
உத்தமரு மகானு
நூறு நாள் வண்டியில
தனியாளா வராரு
தரனி மக்கள் உள்ளத்தை
தனதாக்கி வராரு

மண்ண காக்க
மன்னர்களையெல்லாம் பார்த்து
பேசி வராரு
மலடான மண்ணை யெல்லாம்
மீட்க சொல்லி வராரு
நம் சந்ததி வாழ
நல்ல வழிய சொல்லிகிட்டுதான் வராரு
நாளை வரும் பேரிடரை
முன்னே சொல்லி வராரு (வராரு)

கோடி‌கோடி ஆண்டுகளாய்
கோள்களின் மேல் மண்ணது 
இயற்கையின் சுழற்சியால்
வளமான சொத்தாணது
பாவி மக்கா நம் இனமே
அதை  தப்பாக பாவித்தது
மொத்தமும் வீணாச்சே
சத்து இல்லா மணலாச்சே

நாம் உண்ணும்
உணவுதுதான்
நேற்று போல் இன்றில்லை
உண்மையில் ஒன்ன சொன்னாக்கா
நாளை அதுவும் இல்லை
நாம்  விழித்து கொள்ள 
நேரமிதுதான் மானிடரே

இத்தனையும் இங்கு 
நீயும் நானும்தான்
புரிந்து கொள்ள வேண்டுமுன்னு
தன் உடல் வருத்தி 
ஊர் நன்மை நிருத்தி
மக்கள் சாமி வராரு.  (வராரு)

காயி கறி கணி வகைகள்
உயிர் இல்லா வெருமுடலு
வயல்களில் மண்ணதுவோ
செயற்கையால் நஞ்சானது
ஐந்து சதம் கரிமவளம் 
முன்பெல்லாம் இருந்ததய்யா
புள்ளி மூணு தானிருக்கு  இப்போ
மண்ணு இல்ல மணலு அய்யா

மண்ணில்புழு இல்லை 
பொன்வண்டும் அங்கில்லை 
வயல்வெளியை பார்த்தாக்கா
நுண்ணுயிர்கள் இல்லை
தலைசத்தும் இல்லை - அதை
மீட்க்க வேண்டும் மானிடரே

இந்நிலமை மாறி
உலகம் மீண்டு  மண் பயனுற
வேண்டுமென்று
தன் உடல் வருத்தி
ஊர் நன்மை நிருத்தி
மக்கள் சாமி வராரு.  (வராரு)

Comments

Popular posts from this blog

குருவே சரணம்

மண் காப்போம்