மௌனம்
குயிலே உன்தன் மௌனத்தால்
என் மயிலின் நடனம் நின்றுபோனது
மழையே உன்தன் மௌனத்தால்
என் பூமியெங்கும் வரண்டு போனது
சூரியனே உன் மௌனத்தால்
என் உலகமெல்லாம் இருண்டு போனது
வெண்ணிலவே உன் மௌனத்தால்
என் கண்களிரண்டும் தூக்கம் மறந்தது
சிந்தனையே உன் மௌனத்தால்
என் மனதிலெங்கும் துக்கம் படர்ந்தது
வண்டினமே உன் மௌனத்தால்
பூக்கள் எல்லாம் கருகிப் போனது
பயிரினமே உன் மௌனத்தால்
என் பசியே இன்று ஈசனானது
பொறுமையே உன் மௌனத்தால்
என் ஆயுள் காலம் சிறுத்து போனது
பசுமையே உன் மௌனத்தால்
மகிழ்ச்சி என்றும் அழிந்து போனது
சத்தியமே உன் மௌனத்தால்
தர்மம் எங்கும் அழிந்து போனது
என் மயிலின் நடனம் நின்றுபோனது
மழையே உன்தன் மௌனத்தால்
என் பூமியெங்கும் வரண்டு போனது
சூரியனே உன் மௌனத்தால்
என் உலகமெல்லாம் இருண்டு போனது
வெண்ணிலவே உன் மௌனத்தால்
என் கண்களிரண்டும் தூக்கம் மறந்தது
சிந்தனையே உன் மௌனத்தால்
என் மனதிலெங்கும் துக்கம் படர்ந்தது
வண்டினமே உன் மௌனத்தால்
பூக்கள் எல்லாம் கருகிப் போனது
பயிரினமே உன் மௌனத்தால்
என் பசியே இன்று ஈசனானது
பொறுமையே உன் மௌனத்தால்
என் ஆயுள் காலம் சிறுத்து போனது
பசுமையே உன் மௌனத்தால்
மகிழ்ச்சி என்றும் அழிந்து போனது
சத்தியமே உன் மௌனத்தால்
தர்மம் எங்கும் அழிந்து போனது
Comments
Post a Comment