மறந்தவை!
சாதி என்பார் மதம் என்பார்
மனிதம் என்று ஒன்றுண்டு
அதை ஏனோ மறந்தாரே!
பெயர் என்பார் புகழ் என்பார்
மனம் என்று ஒன்றுண்டு
அதை ஏனோ மறந்தாரே!
சட்டம் என்பார் கடமை என்பார்
கருணை என்று ஒன்றுண்டு
அதை ஏனோ மறந்தாரே!
விதி என்பார் வினை என்பார்
உண்மை என்று ஒன்றுண்டு
அதை ஏனோ மறந்தாரே!
உடல் என்பார் உயிர் என்பார்
வாழ்க்கை என்று ஒன்றுண்டு
அதை ஏனோ மறந்தாரே!
மனிதம் என்று ஒன்றுண்டு
அதை ஏனோ மறந்தாரே!
பெயர் என்பார் புகழ் என்பார்
மனம் என்று ஒன்றுண்டு
அதை ஏனோ மறந்தாரே!
சட்டம் என்பார் கடமை என்பார்
கருணை என்று ஒன்றுண்டு
அதை ஏனோ மறந்தாரே!
விதி என்பார் வினை என்பார்
உண்மை என்று ஒன்றுண்டு
அதை ஏனோ மறந்தாரே!
உடல் என்பார் உயிர் என்பார்
வாழ்க்கை என்று ஒன்றுண்டு
அதை ஏனோ மறந்தாரே!
விணை = வினை
ReplyDelete