பாரதியார்
முண்டாசு கட்டிக்கிட்டு
முருக்கு மீசை வச்சுக்கிட்டு
எளிய தமிழ் கவிதை பாட
வந்தவன் நீ - எங்கள்
பாரதம் காக்க வந்த
பாரதி நீ
மிரட்டும் பார்வை
கொண்ட கண்கள்
விரட்டும் வேகம்
கொண்ட கால்கள்
தன்னகத்தே கொண்ட
பாவலன் நீ - எங்கள்
உள்ளமதை கொள்ளை கொண்ட
பாரதி நீ
இலக்கணங்கள்
கட்டி வைத்த
மரபுக்கவிதைகளை
புதுக்கவிதை யாக்கி தந்த
புதல்வனும் நீ - எங்கள்
கவிதைகளை வளர வைத்த
பாரதி நீ

சரியான நாளில் சரியான கவிதை. பாராட்டுகள்.
ReplyDeleteநன்றி
Delete