Posts

Showing posts from July, 2024

மலர்ச்சி

வீழ்புனல் மனம் கவர்கிறதே உயிர் மீழ்ச்சியை உணர்கிறதே புதிதாய் புலரும் இது என்ன மாற்றமோ இளம் தளிர் கிளை மலர்களிலும் - என் உயிர் கலந்துனர் வாகிறதே இயல்பாய் இனையும் இது என்ன மாற்றமோ கால தீயில் வாழ்வை இழக்க எத்தனித்தவன் - நான் குரு பாத நிழலில் புதிதாய் ஜனித்து வந்தவன் உடலை மறந்து பெரு உயிராய் உணர்கிறேன் - இனி உலகே எனது அதை வாழப்போகிறேன்