வீழ்புனல் மனம் கவர்கிறதே உயிர் மீழ்ச்சியை உணர்கிறதே புதிதாய் புலரும் இது என்ன மாற்றமோ இளம் தளிர் கிளை மலர்களிலும் - என் உயிர் கலந்துனர் வாகிறதே இயல்பாய் இனையும் இது என்ன மாற்றமோ கால தீயில் வாழ்வை இழக்க எத்தனித்தவன் - நான் குரு பாத நிழலில் புதிதாய் ஜனித்து வந்தவன் உடலை மறந்து பெரு உயிராய் உணர்கிறேன் - இனி உலகே எனது அதை வாழப்போகிறேன்
வராரு வராரு என் குருவே வராரு உலகம் சுற்றி வராரு உத்தமரு மகானு நூறு நாள் வண்டியில தனியாளா வராரு தரனி மக்கள் உள்ளத்தை தனதாக்கி வராரு மண்ண காக்க மன்னர்களையெல்லாம் பார்த்து பேசி வராரு மலடான மண்ணை யெல்லாம் மீட்க சொல்லி வராரு நம் சந்ததி வாழ நல்ல வழிய சொல்லிகிட்டுதான் வராரு நாளை வரும் பேரிடரை முன்னே சொல்லி வராரு (வராரு) கோடிகோடி ஆண்டுகளாய் கோள்களின் மேல் மண்ணது இயற்கையின் சுழற்சியால் வளமான சொத்தாணது பாவி மக்கா நம் இனமே அதை தப்பாக பாவித்தது மொத்தமும் வீணாச்சே சத்து இல்லா மணலாச்சே நாம் உண்ணும் உணவுதுதான் நேற்று போல் இன்றில்லை உண்மையில் ஒன்ன சொன்னாக்கா நாளை அதுவும் இல்லை நாம் விழித்து கொள்ள நேரமிதுதான் மானிடரே இத்தனையும் இங்கு நீயும் நானும்தான் புரிந்து கொள்ள வேண்டுமுன்னு தன் உடல் வருத்தி ஊர் நன்மை நிருத்தி மக்கள் சாமி வராரு. (வராரு) காயி கறி கணி வகைகள் உயிர் இல்லா வெருமுடலு வயல்களில் மண்ணதுவோ செயற்கையால் நஞ்சானது ஐந்து சதம் கரிமவளம் முன்பெல்லாம் இருந்ததய்யா புள்ளி மூணு தானிருக்கு இப்போ மண்ணு இல்ல மணலு அய்யா மண்ணில்புழு இல்லை பொன்வண்டும...
பூமியோட future பத்தி சொல்ல போறேன் Shocking செய்தி என்ன செய்தி நா சொல்றேன் கேளு bro பூமியோட future பத்தி சொல்ல போறேன் Shocking செய்தி மண்ணு எல்லாம் dummy ஆச்சு Carbon இல்லா காடாய் போச்சு நீயும் நானும் வாழ நல்ல வழியில்லை மாமு Nextu Generationukum இது ஆபத்து மாமு நாம என்ன பன்னுறது நம்ம வாழும் பூமி காக்க சொல்ல போறேன் Super சேதி Dummy ஆண மண்ண மீட்க Greenis ஆக மாத்தி காட்ட Save Soil இயக்கம் இருக்கு அதில் சேர்ந்திடு மாமு கூடவே நம்ம சொந்தங்களையும் இதில் சேர்த்திடு மாமு Save soil baby மண் மணலாய் போனால் எல்லாம் worstu மணல் மண் ஆனா அது தான் Bestu Hey. Hahaha வளமை போணால் வாழ்வே போச்சு உயிரே இல்லா உடலுமாச்சு நம்முடைய தலைமுறை இதை மாத்தனும் மாமு சட்டங்கள் போட சொல்லி கேட்கணும் மாமு விஞ்ஞானம் சொல்லுறத விளக்கனும் மாமு மெய்ஞான குருவின் வழி நடக்கனும் மாமு நீயும் நானும் வாழ நல்ல வழியில்லை மாமு Nextu Generationukum இது ஆபத்து மாமு மக்கா.. ( பூமியோட)
நம் வாழ்வை தந்த மண்ணின் குரலை செவிகள் கேட்கிறதா உடலும் உயிருமான மண்ணை மனமும் உணர்கிறதா அந்த மலைகள் மரங்கள் கொடிகள் செடிகள் குரலும் கேட்கிறதா அவை அழிவின் விளிம்பில் தவிக்கும் தவிப்பை நம் மனிதம் உணர்கிறதா இதுவே தருணம் கேளு மனமே இயல்பில் இணைந்து விடு முழு வாழ்வான மண்ணின் வளத்தை காக்க உறிதியெடு நீ காக்க உறிதியெடு. நீர் நிலைகளும் பல உயிர்களும் இங்கு நீள வேண்டாமா பெரு வலியின்றி நம் குழந்தைகள் இங்கு வாழ வேண்டாமா கேளு மனமே இதுவே தருணம் உணமை உணர்ந்து விடு பெரு வாழ்வை தந்த மண்ணின் வளத்தை காக்க உறிதியெடு மண் காத்திடு உன்னில் மலர்ந்திடு மண் காத்திடு உலகை மீட்டெடு
ஒத்த வண்டியில மொத்த உலகுக்கும் நன்மை செய்திட போறானே என்னில் தெய்வம் செய்த குரு மண்ணை காத்திட உலகம் சுற்றி வர போறானே முப்புரம் அழிக்கும் சிவனையறிவோம் இங்கு காக்கும் ஜீவனை பாருங்கள் கண்ணை மூடியே கைகள் கூப்பியே அவன் பாதம் தொடர்ந்திட வாருங்கள்
மண் மாறி போச்சே மலடாக்கி யாச்சே மண்ணோடு வாழ்ந்த வாழ்க்கை மாறிடுச்சே மண் மணலு மாகிடுச்சே உயிரில்லா மணல் வெளியில் வாழ்வது சாத்தியமா சொல் உண்மையை உணரு மீண்டெழ முயலு மரபின்றி பயிர் செய்தாய் வரம்பின்றி மரம் கொய்தாய் உயிரின்றி வாழ்கின்றாய் உணர்வின்றி வீழ்கின்றாய் மணல் மீட்டு மண்ணாக்கு உடலோடு உயிர் ஊற்று எதிர்காலம் வளமாக்க ஆள்வோர்க்கு வழிகாட்டு