தருணம்
நம் வாழ்வை தந்த
மண்ணின் குரலை
செவிகள் கேட்கிறதா
உடலும் உயிருமான
மண்ணை மனமும்
உணர்கிறதா
அந்த மலைகள் மரங்கள்
கொடிகள் செடிகள்
குரலும் கேட்கிறதா
அவை அழிவின் விளிம்பில்
தவிக்கும் தவிப்பை நம்
மனிதம் உணர்கிறதா
இதுவே தருணம் கேளு மனமே
இயல்பில் இணைந்து விடு
முழு வாழ்வான மண்ணின் வளத்தை
காக்க உறிதியெடு நீ
காக்க உறிதியெடு.
நீர் நிலைகளும் பல உயிர்களும்
இங்கு நீள வேண்டாமா
பெரு வலியின்றி நம் குழந்தைகள்
இங்கு வாழ வேண்டாமா
கேளு மனமே இதுவே தருணம்
உணமை உணர்ந்து விடு
பெரு வாழ்வை தந்த மண்ணின் வளத்தை
காக்க உறிதியெடு
மண் காத்திடு
உன்னில் மலர்ந்திடு
மண் காத்திடு
உலகை மீட்டெடு
Comments
Post a Comment