Posts

Showing posts from 2017

பாரதியார்

Image
முண்டாசு கட்டிக்கிட்டு முருக்கு மீசை வச்சுக்கிட்டு எளிய தமிழ் கவிதை பாட வந்தவன் நீ - எங்கள் பாரதம் காக்க வந்த பாரதி நீ மிரட்டும் பார்வை கொண்ட கண்கள் விரட்டும் வேகம் கொண்ட கால்கள் தன்னகத்தே கொண்ட பாவலன் நீ - எங்கள் உள்ளமதை கொள்ளை கொண்ட பாரதி நீ இலக்கணங்கள் கட்டி வைத்த மரபுக்கவிதைகளை புதுக்கவிதை யாக்கி தந்த புதல்வனும் நீ - எங்கள் கவிதைகளை வளர வைத்த பாரதி நீ

பணநாயகம்

Image
பசியாத்தும் சோத்தகூட சூட்டோடு நீ பிடிச்சா கையே கொதிக்குதுன்னு கத்துவியே அலறுவியே அம்மானும் அப்பானும் கண்ணால அழுகுவியே செல்லமே உடம்பெல்லாம் தீயால வெந்து கொண்டிருக்க நீ அழுத அழுகையெல்லாம் அம்மாவுக்கு கேட்கலையோ உன் அப்பாவுக்கும் கேட்கலையோ அரசாங்க அதிகாரி எவருக்கும் கேட்கலையோ பாவபட்ட பிறப்பெடுத்து பணப்பேய்க்கு இரையானாயே செல்லமே எரியும் உன்னுடலை படமாய் பார்கையிலே நீ பட்ட வேதனைகள் கொள்ளாமல் கொள்ளுதடா ஆற்றாமையால் கண்கள் குளமாகி விம்முதடா....

என் மனைவிக்கு

இழந்த வாழ்வை மீட்டுத் தந்த இளையவளே என்றும் எந்தன் உயிரை காக்கும் உமையவளே எண்ணம் எல்லாம் நிறைந்தவளே வாழ்வில் மாற்றம் ஏற்றம் தந்தவளே வைஷ்ணவியே வைஷ்ணவியே எனக்காய...

குழந்தையும் தெய்வமும்

Image
தெய்வம் இங்கே மண்ணில் வந்து என்னை பார்த்து சிரிக்க சித்தம் பித்தம் தெளிந்து உள்ளம் உண்மையிலே திளைக்க கடவுளை கண்ட பக்தனாக எல்லாம் ஒன்றில் அடங்க உன்மை கண்டேன்... குழந்தையும் தெய்வமும் ஒன்றே என்று

என் மகள் சிவன்யதனுவிற்காக தாலாட்டு

Image
ஆராரோ ஆரிராரோ என் மகளே கண்ணுறங்கு பொன் மகளே கண்ணுறங்கு பூ மகளே கண்ணுறங்கு.               (ஆராரோ) ஒன்றானாய் கண்ணுறங்கு இரு மலரே கண்ணுறங்கு முத்தமிழே கண்ணுறங்கு நான்முகிலே கண்ணுறங்கு.        (ஆராரோ) ஐம்பொழிலே கண்ணுறங்கு ஆறறிவே கண்ணுறங்கு ஏழேழு ஜென்மத்திலும் எட்டாத கனியமுதே ஒன்பதில் நீ பெண்ணாணாய் பத்தில் என் மகளானாய்.              (ஆராரோ) அப்பாவை அறிவாயோ அல்லியே நீ கண்ணுறங்கு அம்மாவை தெரிவாயோ ஆலணங்கே கண்ணுறங்கு தாத்தாவை அறிவாயோ தாமரையே கண்ணுறங்கு பாட்டியை நீ தெரிவாயோ பால் நிலவே கண்ணுறங்கு.      (ஆராரோ) மாமாக்கள் அறிவாயோ மாதுளையே கண்ணுறங்கு அத்தைகளை தெரிவாயோ அண்ணமே நீ கண்ணுறங்கு சித்திகளை தெரிவாயோ சின்னவளே கண்ணுறங்கு சித்தப்பாக்கள் அறிவாயோ சீக்கிரமாய் கண்ணுறங்கு.         (ஆராரோ) தாய்மாமன் அறிவாயோ தங்கமே நீ கண்ணுறங்கு தாய் பாட்டியை நீ அறிவாயோ தமிழ் மகளே கண்ணுறங்கு சொந்தங்களை அறிவாயோ சொன்னபடி கண்ணுறங்கு சோகங்களை களைவாயோ சொர...

அயோக்கியன்

காட்டை அழித்து நகரம் ஆக்கியவனும் திருட்டுத்தனமாய் அனுமதி வாங்கி வீட்டுமணை போட்டவனிடம் மணை வாங்கி வீடுகட்டி விவசாயம் அழித்தவனும் சிவனென்று வருகையில் இயற்கை ஆர...

முயற்சி

முரட்டு மூங்கிலிலும் காற்று நுழைந்து இசையாகும் இருட்டு வேலையிலும் நிலவு ஒளிர்ந்து வழிகாட்டும் துன்பம் வந்ததென்று தோழா துவண்டு வீழாதே இன்பம் நாளை வரும் தோழா முயற்சியை இழக்காதே பூமி புதையும் விதையைபார் நாளை விருட்சமாய் மாரும் சிறைபட்ட நீர்துளியும் - ஒருநாள் சிப்பியில் முத்தாகும் விதியென்று வீழ்ந்து விட்டால் – புது விதி செய்ய யார் வருவார் தோல்விகள் விட்டு விடு – இனி வெற்றியில் நிலைத்து விடு சரித்திரம் படைப்பதற்கு – நீ சத்தியம் செய்து கொடு சந்தர்ப்பம் உனதாக்கு – புது சந்தர்ப்பம் உருவாக்கு கோல்களின் கோபத்தினால்      நடப்பது நடக்கட்டுமே நீ செயலிலே நிலைத்துவிடு – பாரில்      கோலோச்சும் நிலையை பெறு

சிந்திக்க - 6

பொங்கல் திருநாள் நெருங்குகிறது.  இந்த வேளையில் பலர் உழவர்களின் தொடர் உயிரிழப்பால் விரக்கதியில் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதில்லை என்று முடிவெடுத்து அதை அறிக்...

மகள் பிறந்துவிட்டாள்

மங்களம் பொங்க மனமது மகிழ உறவுகள் நெகிழ உள்ளங்கள் மகிழ தைபிறக்க நாள் இருக்க முந்தி வந்த தெய்வம் அவள் என் வாழ்வை வழம் ஆக்க புதனில் வந்த பூவையவள் சிந்திக்க சிந்திக்...

சிந்திக்க - 5

பொங்கல் பண்டிகையின் போது தொலைக்காட்சியில் அடங்கி போகாமல், காசுக்காக மற்றவர் அடிக்கும் கூத்தை வாய்பிழந்து வீட்டிற்குள்ளேயே அமர்ந்து வேடிக்கை பார்க்காமல் பொங்கலின் இனிமையை கொண்டாடி மகிழுங்கள். உங்கள் கிராமத்திற்கு செல்லுங்கள் அல்லது தங்களுக்கு நெருங்கியவர் கிராமத்திற்கு செல்லுங்கள் அதுவும் இல்லையெனில் பொங்கல் பயணம் என்று பெயரிட்டு குடும்பத்துடன் அருகில் இருக்கும் கிராமங்களுக்கு சென்று பாரம்பரிய பொங்கலை கொண்டாடுங்கள். தொலைக்காட்சியில் தொலைந்த விழாக்களின் மகிழ்ச்சியை மீட்டெடுப்போம்.

மாலை மயக்கம்

சாயும் வேளையில்      புலரும் இரவில் கடலின் கரையில்      மணலின் மடியில் காதல் பழகும்      ஐோடி கிளிகள் கடலின் அலையில்     கம்பீர முழக்கம் நிலவின் ஒளியில் - அவள்      முகத்தில் மயக்கம் அதை பார்த்து - தலைவன்       சேவகன் ஆக அவள் காதல் தேசத்து       ராணியானால் நிலவின் ஒளியில் - உருவங்கள்       நிழலாய் மாற பக்கங்கள் இருண்டு - அவள்       முக மதி(ல்) மிளிற அதை பார்த்து அவனும்       பரவசம் கொள்ள அட என்ன இது       இங்கு சூரியன் நிலவிடம் இருந்து       ஒளி பெருகிறதே!!!

சிந்திக்க - 4

இன்று ஏறுதழுவலுக்கு ஆதரவாக குவிந்த தமிழ் சிங்கங்களை நினைக்கையில் உள்ளம் மகிழ்கிறது.  நம் பாரம்பரியம் மீட்டெடுக்கப்படும் என்பதிலும் நம்பிக்கை துளிர்க்கிறது. அ...

உளரல்கள்

உலகிற்கே அதிசயம் எட்டானது ஒரு நிலவு என்னிடம் வாய் திறந்து பேசும் போது அழகு நிலவாய்       பெண்ணே நீ வெட்கப்பட்டால்       சந்திர கிரகணம் கோவப்பட்டால்       சூரிய கிரகணம் நீ என்னிடம் பொய் சொல்லும் நிமிடங்களில் நினைவில் வருவது அமாவாசையில் பொய்க்கும் நிலவின் வருகை எழுதுகோல் கூட வெட்கப்பட்டது - நீ அதை பிடித்து எழுதும்போது நீ பிடித்து எழுதுகையில்       திக்கி நிற்கும் பேனா உன் அருகாமையில்       ஊமையாகும் நான் காதலின் கண்கள் கனவுகளையே          விரும்புகிறது! காதலின் உதடுகள் பொய்களையே          பேசுகிறது! காதலின் காதுகளோ பொய்களையே          ரசிக்கிறது! ஆக.... காதல் பொய்யின் வாசம்... காமம் மெய்யின் சுவாசம்....

சிந்திக்க - 3

ஆபத்தான ஆயுதங்கள் வைத்திருக்க சட்டம் இடம் கொடுப்பதில்லை. ஆனால் அதிலிருந்து ஒரு இனத்திற்கு சட்டத்திலேயே  விலக்கும் அளிக்கப்பட்டிருக்கிறது. ஏனென்றால் கத்தியை அ...

என்னுடைய ஹைக்கூ தொகுப்பு - 1

நிலவு இரவில் மட்டும் முகம் காட்டி இளைஞர்களை மயக்கும் மாயக்காரி சூரியன் மறையும் பொழுது கூட மங்களமாக நீ முள் அழகை காக்க அவசிய தேவை சொல் வெற்றி பெற்றவர்கள் பயன்படு...

மீட்டெடுப்போம்

நம் ஆன்மீக அறிவியலை ஆரியரிடம் இழந்தோம் விவசாய தந்திரங்களை - ஆங்கில வியாபாரியிடம் இழந்தோம் நல்ல கல்வி முறையதனை நாடோடிகளிடம் இழந்தோம் நம் குடும்ப முறையதனை நயவஞ்சகரிடம் இழந்தோம் நம் அழகு ஆடைகளை நடிகனிடம் இழந்தோம் நம் உணவு முறையதனை கவர்ச்சியிலே இழந்தோம் போதும் தமிழா போதும் நம் வீர விளையாட்டுகளை நம் வீர பண்பாட்டை நடிக்கும் சில சங்கங்களிடம் இழக்க வேண்டுமா? இதுதான் சமயம் இழந்தவற்றை மீட்டெடுப்போம் வீரத்தமிழ் மகனாய் நிமிர்ந்து நிற்போம் வாழ்க தமிழ்

சிந்திக்க - 2

வடமொழி சொல் ஜல்லிகட்டு அதற்காக அதை சல்லிகட்டுனு பயன்படுதனுமா. வடமொழி சொற்களை தமிழ் படுத்துவதை நிறுத்தவும். நம் தமிழ் ஒன்றும் வார்த்தை பற்றாக்குறை உள்ள மொழி அல்ல. ...

புத்தாண்டு வாழ்த்துக்கள்

ஆங்கில புத்தாண்டில் அழகு தமிழ் வாழ்த்துக்கள் ஆர்ப்பாட்டமான திருவிழாவில் அமைதி தமிழ் வாழ்த்துக்கள் சீமைக்காரன் கொண்டாட்டத்தில் சிறப்புத் தமிழ் வாழ்த்துக்கள...