பணநாயகம்



பசியாத்தும் சோத்தகூட
சூட்டோடு நீ பிடிச்சா
கையே கொதிக்குதுன்னு
கத்துவியே அலறுவியே
அம்மானும் அப்பானும்
கண்ணால அழுகுவியே
செல்லமே

உடம்பெல்லாம் தீயால
வெந்து கொண்டிருக்க
நீ அழுத அழுகையெல்லாம்
அம்மாவுக்கு கேட்கலையோ உன்
அப்பாவுக்கும் கேட்கலையோ
அரசாங்க அதிகாரி
எவருக்கும் கேட்கலையோ
பாவபட்ட பிறப்பெடுத்து
பணப்பேய்க்கு இரையானாயே
செல்லமே

எரியும் உன்னுடலை
படமாய் பார்கையிலே
நீ பட்ட வேதனைகள்
கொள்ளாமல் கொள்ளுதடா
ஆற்றாமையால் கண்கள்
குளமாகி விம்முதடா....

Comments

Popular posts from this blog

பாரதியார்

குழந்தையும் தெய்வமும்

என் மனைவிக்கு