மலர்ச்சி
வீழ்புனல் மனம் கவர்கிறதே
உயிர் மீழ்ச்சியை உணர்கிறதே
புதிதாய் புலரும் இது என்ன மாற்றமோ
இளம் தளிர் கிளை மலர்களிலும் - என்
உயிர் கலந்துனர் வாகிறதே
இயல்பாய் இனையும் இது என்ன மாற்றமோ
கால தீயில் வாழ்வை இழக்க எத்தனித்தவன் - நான்
குரு பாத நிழலில் புதிதாய் ஜனித்து வந்தவன்
உடலை மறந்து பெரு உயிராய் உணர்கிறேன் - இனி
உலகே எனது அதை வாழப்போகிறேன்
Comments
Post a Comment