நமக்கெதற்கு
ஆக்குவிக்கும் திறன் ஆயிரம் கோடி கொண்டிருந்தும்
ஆழமாய் பகுத்தறியா அறிவாளி நமக்கெதற்கு
உயிர்துறந்து உருவான உறவென்று இருந்தாலும்
பிற உறவை மதியாத உறவொன்று நமக்கெதற்கு
பல ஆண்டு செலவழித்து பயில்கின்ற மானிடனின்
பண்பொன்றை மாற்றாத கல்வியது நமக்கெதற்கு
பல பெரியர் ஆராய்ந்து தோற்றுவித்திருந்தாலும்
மனிதனை மனிதனாக்கா மதமொன்று நமக்கெதற்கு
பல குடும்பம் வாழ்வதற்கு வழி வகுத்திருந்தாலும்
சீரழிவை ஏற்படுத்தும் தொழில் வகைகள் நமக்கெதற்கு
தன் நிலைமை அறியாமல் பிறர் தரமும் தெறியாமல்
தேவையற்ற வார்த்தைகளைப் பேசுமினம் நமக்கெதற்கு
கண்காணா தொன்றிற்காய் காரியங்கள் பல செய்து
கடமையதை மறக்கின்ற மனித இனம் நமக்கெதற்கு

Comments
Post a Comment