எய்ட்ஸ்

ஒருவனுக்கு ஒருத்தி என்று
ஓதி வளர்த்த நம் நாட்டில்
ஓரினச் சேர்க்கை அவலங்கள்
அதனால் எய்ட்ஸின் பயங்கரங்கள்

காம உணர்வை அடக்காமல்
கட்டுக்குள்ளே அடங்காமல்
ஊரில் உள்ள பலருடனே
ஒருவர் செய்யும் களியாட்டம்
சிந்தனை அதையே சிதறடிக்கும்
கண்காணா கிருமிகளால் உடல் அழிக்கும்

சரியாய் வழிகள் வகுக்காமல்
முறையாய் வாழ்க்கை வாழாமல்
உணர்ச்சியின் வழியில் சென்றாலே
இயற்கை போடும் தடைகல்லு
எய்ட்ஸென்றும் அழிவின் படிக்கல்லு

எந்தன் நாட்டுக் காளைகளே
பூவையொத்த பூவைகளே
கட்டுப்பாடாய் வாழுங்கள்
காமம் அதையே வெல்லுங்கள்

கால தேவன் கணக்கேட்டில்
சரித்திரம் படைத்து வாழுங்கள்
நாட்டின் பெருமை காத்திடுங்கள்
புதிய வரலாறு படைத்திடுங்கள்

Comments