என்ன செய்ய?
சுயநலம் கொண்ட அரசியலார்
அடிமைகளாக அதிகாரிகள்!
தங்களுக்கே பாதுகாப்பு
கோரும் காவலர்கள்!
எதற்கும் சம்மந்தமின்றி
ஆராய்ச்சியில் அறிவியலார்!
வாரிசுகள் மட்டுமே ஆட்சி
செய்யும் மக்களாட்சி!
பணம் படைத்தோன்
பலம் படைத்தோன்
ஆட்டுவிக்கும் ஜனநாயகம்!
சாதி நூறு, சங்கம் நூறு
மதம் நூறு, மாறுபாடு நூறு - இது
வேற்றுமையில் ஒற்றுமை!
எதற்கு வேண்டும் சட்டம்
எப்படி வேண்டும் சட்டம்
தெரியாத சட்டவியலார்!
செத்துப் போன உடல்களாக
சட்டங்கள் பல நூறு!
எது சரி, எது தவறு
சமுதாயத்தில் நம் நிலை என்ன?
எதுவும் தெரியாத மக்கள்!
பஞ்சத்தில் பாதி பேர்
செத்து போவார் ஒருபக்கம்
அரைகுறை நடனமாடி
மேடையிலே கொண்டாட்டம் மறுபக்கம்!
கண்டும் காணாததுமாய்
காரணகர்த்தாக்கள் வேறுபக்கம்!
இத்துணையும் பார்த்து நாம்
ஒதுங்கி வாழ கத்துக்கணும்
"ஊரோடு ஒத்துப்போ" சொன்னவர்
என் மூத்தவர்; அனுபவசாலிகளாம்!
மாற்றம் செய்ய நினைச்சாக்க நாம்
மாறி போக வழியுண்டு - இல்லை
மண்ணில் போக வாய்ப்புண்டு!
தாயே மனிதம் காணவில்லை
நான் என்ன செய்ய?
அடிமைகளாக அதிகாரிகள்!
தங்களுக்கே பாதுகாப்பு
கோரும் காவலர்கள்!
எதற்கும் சம்மந்தமின்றி
ஆராய்ச்சியில் அறிவியலார்!
வாரிசுகள் மட்டுமே ஆட்சி
செய்யும் மக்களாட்சி!
பணம் படைத்தோன்
பலம் படைத்தோன்
ஆட்டுவிக்கும் ஜனநாயகம்!
சாதி நூறு, சங்கம் நூறு
மதம் நூறு, மாறுபாடு நூறு - இது
வேற்றுமையில் ஒற்றுமை!
எதற்கு வேண்டும் சட்டம்
எப்படி வேண்டும் சட்டம்
தெரியாத சட்டவியலார்!
செத்துப் போன உடல்களாக
சட்டங்கள் பல நூறு!
எது சரி, எது தவறு
சமுதாயத்தில் நம் நிலை என்ன?
எதுவும் தெரியாத மக்கள்!
பஞ்சத்தில் பாதி பேர்
செத்து போவார் ஒருபக்கம்
அரைகுறை நடனமாடி
மேடையிலே கொண்டாட்டம் மறுபக்கம்!
கண்டும் காணாததுமாய்
காரணகர்த்தாக்கள் வேறுபக்கம்!
இத்துணையும் பார்த்து நாம்
ஒதுங்கி வாழ கத்துக்கணும்
"ஊரோடு ஒத்துப்போ" சொன்னவர்
என் மூத்தவர்; அனுபவசாலிகளாம்!
மாற்றம் செய்ய நினைச்சாக்க நாம்
மாறி போக வழியுண்டு - இல்லை
மண்ணில் போக வாய்ப்புண்டு!
தாயே மனிதம் காணவில்லை
நான் என்ன செய்ய?
very very Super ,Congrats
ReplyDeletei like this kavithai very much......... Superb....
ReplyDeletethese lines shows the real patriotic feel........ very niceeeeee...
ReplyDelete