நன்றியுடன்
உடல் பற்றாள்
உயிர் மறந்து
சிவம் மறந்து
உணர்விழந்த
மாக்கள் எம்மை
பாடச்சொன்னாய்
ஆடச்சொன்னாய்
ஆடச்சொன்னாய்
ஆடிக்கொண்டே
இருக்கச் சொன்னாய்
ஆடினோம் ஆடினோம்
ஆடிக்கொண்டே இருந்திருந்தோம்
உடலுணர்வை உயிர் மறந்து
வெளியேறும் நிலை தொட்டும்
ஆடினோம் ஆடினோம்
ஆடிக்கொண்டே இருந்திருந்தோம்
நடுஇரவு
பாதி உயிர் உடலுடன்
மீதி உயிர் இறையுடன்
தியானம் சொன்னாய்
நாங்கள் செய்தோம்
உடல் களைப்பில்
வெளியேற துடித்த உயிர்
ஒரு கணப்பொழுதில் சிவன்
உணர நானும் சிவமாகி
இருந்தேன் சில பொழுது
சித்தனாக எத்தனித்து
எத்தனையோ உயிர்கள்
பித்தனாகி போனதுன்டு
கடும் தவமில்லை
பட்டினியில்லை
துறவறமில்லை
தலைகீழாய் தொங்கவுமில்லை
கொடும்தீயில் நிற்கவுமில்லை
எம் வழியில் நீ வந்து
சிவமுணர வகைசெய்தாய்
ஈசாவை தந்த சத்குருவே
உனை காணும் பொழுதெல்லாம்
கை கூப்பி நிற்கின்றேன்
நீ கடவுள் என்பதற்காக அல்ல
என்னில் கடவுள் செய்தாய்
என்பதற்காக.
Comments
Post a Comment