விவசாயிகள் தினம் 2016

விதை போட்டு பயிரை
விளைய வச்சு
விளஞ்சதுக்கு
விலை வைக்க
வழியின்றி திண்டாடி
கிடைச்ச விலைக்கு அதை
வித்து போட்டு
கையில பத்துகாசு
மிஞ்சாம போனாலும்

பிறர்க்கு சோறு போட்ட
நிறைவோட வீடு போக
தனக்கு அங்க நல்ல
சோறின்றி போனாலும்

மீண்டும் மீண்டும்
மண்ணை நம்பி
மழையை நம்பி
உழைப்பை நம்பி
தன் வாழ்வை நடத்தும் - நமக்கு
வாழ்வை கொடுக்கும்
கடவுள் விவசாயி

Comments

Popular posts from this blog

பாரதியார்

குழந்தையும் தெய்வமும்

என் மனைவிக்கு