பாலைவனம்

இங்கே...
பூமிக்கு பச்சை வர்ண ஆடை இல்லை
தடை இன்றி வழிந்தோட நீரும் இல்லை
ஜீவன் நின்று இளைப்பாற நிழலுமில்லை
மனிதன் விரும்புகின்ற அளவிற்கு எதுவும் இல்லை

ஆனால்...
மனிதனை பாலைவனம் வெறுக்கவில்லை

சூடான சூழ்நிலையில் வாழ துடிக்கும்
நீருற்றை தன்னுள்ளே சேர்த்து வைக்கும்
மணல் மேட்டில் நடப்பதற்கு ஏற்றவாறு
கால்களெல்லாம் நீளமாக கொண்டிருக்கும்
ஒட்டகத்தின் வாழ்க்கையிலே பாலைவனம் - அது
எப்போதும் ஒட்டகத்தின் சோலைவனம்

வாழ்க்கையிலே சில விஷயம் இதுபோலத்தான்
தனக்குள்ளே எதிர் எதிராய் அமைந்துவிடும்
நமக்குள்ளே புதிர் புதிராய் விடுத்துவிடும்
நம்மையும் சதிராட வைத்துவிடும்

Comments

Popular posts from this blog

பாரதியார்

குழந்தையும் தெய்வமும்

என் மனைவிக்கு