காமராஜர்
சிவகாமியின் செல்வன் - புது
சிந்தனையின் தலைவன்
கல்வி தந்த முதல்வன் - அவன்
கலைவாணி தந்த தமிழன்
தன் பெயர் விளக்கம் பொய்யாக்கி
புது விளக்கம் தனதாக்கி
தரணியிலே வாழ வந்த தவ புதல்வன்
ஏழைகளின் உறவாகி, குழந்தைகளின் குருவாகி
தமிழருக்கு ஏற்றம் தந்த முதல்வன் - அவன்
கல்வி சாலை தந்து,
மதிய உணவு தந்து,
தொழில் கூடம் தந்து,
வாழ்வில் ஏற்றம் தந்தான்.
நெஞ்சில் வீரம் கொண்டு,
செயலில் தீரம் கொண்டு,
சொல்லில் நேர்மை கொண்டு,
பகைமை எல்லாம் வென்றான்.
காமராசன் என பெயர் கொண்டான்
கடமை; கண்ணியத்தை உயிர் கொண்டான்
பார் ஆள வந்த வாய்ப்பினையும்
கண் பாராமல் விலக்கி விட்டு
தமிழருக்காய் வாழ்ந்து - இன்றும்
தமிழரிலே வாழுகிறான்.

Comments
Post a Comment