தை பொங்கல் 2022



கொரோனா வந்து போச்சுடா - தமிழ் நேசா 
டெல்டாவும் வந்து போச்சுடா 

வந்து போன சங்கடங்கள்
வெரும் சம்பவமாய் மாறி போக 

ஒமிக்கிறானும் வந்து நிக்குது
நம் வாழ்வதையும் முடக்கி வைக்குது

கண்ணுக்கு தெரியாத கிருமிகளால் 
நம் வாழ்வதுவும் முடங்கிடுச்சு

இயற்கை தன் இயல்பிற்கு
அழகாக மீண்டுகிச்சு

மண் வளமும்
நீர் வளமும்
வான் பொழியும் மழை வளமும்
உயர்ந்து நிற்கும் மலை வளமும்
உயிர் காக்கும் வளி வளமும்

ஒற்றை செல் உயிருக்கும்
ஒற்றைக்கால் மரத்துக்கும்
பறக்கின்றன பறவைக்கும்
ஊர்ந்து செல்லும் புழுவிற்கும்
நான்கு கால் விலங்கிற்கும்

மனிதா அது பொது வன்றோ
அதை நீ உணர்வதுவும் நன்றன்றோ

இவ்வண்டமே உனதென்று உரிமை
நீ எடுத்துக் கொண்டால்
மனிதனென்ற ஒரு விலங்கு
இருந்ததாக ஆய்வு செய்யும் எதிர்காலம்

தை மாத பிறப்பின்று 
மனிதா நீ மாறிவிடு
மீண்டும் இயற்கையதை
கெடுக்காமல் இருக்கவிடு

இன்று பொங்கல் கொண்டாடு
தினமும் இயற்கையை கொண்டாடு.

அனைவருக்கும் தை திருநாள் வாழ்த்துக்கள்.

Comments

Popular posts from this blog

பாரதியார்

குழந்தையும் தெய்வமும்

என் மனைவிக்கு