சரணடைந்தேன்

கொண்ட நோக்கம் நிறைவேற
பிறவி பல எடுத்து வந்து
எம் பித்தமதை தெளிய செய்து
உயிர் நோக்கம் உணரசெய்தாய்

ஈசனவன் இயல்பில் எமை
நித்தமும் நிலைக்க செய்து
பிற உயிரதுவும் நானேதான்
என்பதையும் உணரசெய்தாய்

உயிரானாய் குருவானாய்
உடல் கொண்ட சிவனே
தாயானாய் தவமானாய்
தியானலிங்க திருவே

உயிர் மறந்து உனை பிரிந்து
பாதை மாறி பயனித்தேன்
உண்மை உணர்ந்து
உன் பாதம் சேர
உயிர் உருக பிராத்தித்தேன்

பிரார்த்தனையை செவிமடுத்து
உன்னோடு எனை ஏற்று
இப்பிறவி பயன் அடைய செய்தாய்

குருவே உனை

சிறம் தாழ்த்தி வணங்குகிறேன்
உமக்கெனவே செயல் புரிவேன்.

Comments

Post a Comment

Popular posts from this blog

பாரதியார்

குழந்தையும் தெய்வமும்

என் மனைவிக்கு