கொரோனா


மதியிழந்த மனித இனம்
சாதியென்றும் சமயமென்றும்
தங்களுக்குள் சண்டையிட்ட
வீழ்கிறதே

தான் கற்ற சிறு புழு அறிவை
மலை போல உயர்த்தி
பார்த்து இருமாப்பு
கொள்கிறதே

மொழியென்றும் இனமென்றும்
மனம் குழம்பி வழி தவறி
உயிர் மறந்து வாழ்கின்றதே

மனிதன் தன் நிலை மாறி
உலகில் தவறு தான்டவமாட
நான் வருவேன் தருமம் காக்க
என்று சொன்ன ஈசா

பூமி அதிர்ந்து
வானம் இடித்து
கடல் பொங்கி அல்ல 
கண்ணிற்கே
தெரியாமலும்
பிரளயம் நடத்தி
மானுடம் காப்பாயென்று
நிருபித்தாய் ஈசா

Comments

Post a Comment

Popular posts from this blog

பாரதியார்

குழந்தையும் தெய்வமும்

என் மனைவிக்கு