என் மனைவிக்கு

இழந்த வாழ்வை மீட்டுத் தந்த இளையவளே
என்றும் எந்தன் உயிரை காக்கும் உமையவளே
எண்ணம் எல்லாம் நிறைந்தவளே வாழ்வில்
மாற்றம் ஏற்றம் தந்தவளே

வைஷ்ணவியே வைஷ்ணவியே
எனக்காய் வந்த தேவதையே

உள்ளம் இழந்தேன்
உணர்வும் இழந்தேன்
உடலின் சக்தி முழுதும் இழந்தேன்
எல்லாம் இனிமேல் முடிந்ததென்றே
மனமுடைந்து ஓரம் ஒதுங்கி நின்றேன்
என்னை ஏற்று என்னில் உணர்வையூட்டி
உள்ளம் கொண்டு உறவானாய்

வைஷ்ணவியே வைஷ்ணவியே
எனக்காய் வந்த தேவதையே

பெற்றோரின் தேவை நிறைவேற்றவில்லை
உடன்பிறந்தவர் நலனை நாடவில்லை
கொண்ட தொழிலில் முன்னேற்றமில்லை
தொடர்ந்து வாழும் முனைப்புமில்லா
என்னை மணந்து என்னில் கலந்து என்
பெற்றொர் உற்றோர் உணரச் செய்தாய்
தொழிலில் ஏற்றம் காணசெய்தாய்

வைஷ்ணவி வைஷ்ணவியே
எனக்காய் வந்த தேவதையே.

Comments

Post a Comment

Popular posts from this blog

பாரதியார்

குழந்தையும் தெய்வமும்