என் மகள் சிவன்யதனுவிற்காக தாலாட்டு
ஆராரோ ஆரிராரோ
என் மகளே கண்ணுறங்கு
பொன் மகளே கண்ணுறங்கு
பூ மகளே கண்ணுறங்கு. (ஆராரோ)
ஒன்றானாய் கண்ணுறங்கு
இரு மலரே கண்ணுறங்கு
முத்தமிழே கண்ணுறங்கு
நான்முகிலே கண்ணுறங்கு. (ஆராரோ)
ஐம்பொழிலே கண்ணுறங்கு
ஆறறிவே கண்ணுறங்கு
ஏழேழு ஜென்மத்திலும்
எட்டாத கனியமுதே
ஒன்பதில் நீ பெண்ணாணாய்
பத்தில் என் மகளானாய். (ஆராரோ)
அப்பாவை அறிவாயோ
அல்லியே நீ கண்ணுறங்கு
அம்மாவை தெரிவாயோ
ஆலணங்கே கண்ணுறங்கு
தாத்தாவை அறிவாயோ
தாமரையே கண்ணுறங்கு
பாட்டியை நீ தெரிவாயோ
பால் நிலவே கண்ணுறங்கு. (ஆராரோ)
மாமாக்கள் அறிவாயோ
மாதுளையே கண்ணுறங்கு
அத்தைகளை தெரிவாயோ
அண்ணமே நீ கண்ணுறங்கு
சித்திகளை தெரிவாயோ
சின்னவளே கண்ணுறங்கு
சித்தப்பாக்கள் அறிவாயோ
சீக்கிரமாய் கண்ணுறங்கு. (ஆராரோ)
தாய்மாமன் அறிவாயோ
தங்கமே நீ கண்ணுறங்கு
தாய் பாட்டியை நீ அறிவாயோ
தமிழ் மகளே கண்ணுறங்கு
சொந்தங்களை அறிவாயோ
சொன்னபடி கண்ணுறங்கு
சோகங்களை களைவாயோ
சொர்னமே நீ கண்ணுறங்கு. (ஆராரோ)
வெற்றிகளை பெற்றிடுவாய்
வேதனைகள் போக்கிடுவாய்
சிவனறிந்து வாழ்ந்திருந்தால்
சிவன்யாவாய் வென்றிடுவாய். (ஆராரோ)

நல்லதொரு தாலாட்டுப் பாடல். வாழ்த்துகள்....
ReplyDeleteநன்றி நண்பரே
Delete...மிகவும் ரசித்தேன்...
ReplyDeleteநன்றி நண்பரே
Deleteசிறப்பு
ReplyDeleteசிறப்பு
ReplyDelete