காதல் பூக்கள்

சினிமா காதல் சிரிக்கின்றார்
நம் இளையோர் காதலை எரிக்கின்றார்
உள்ளம் இரண்டாய் வாழ்கின்றார்
உண்மை மறந்து வீழ்கின்றார்

சதிகள் செய்தோர் வாழ்கின்றார்
சாதிகள் சொல்லி பிழைக்கின்றார்
இதனை அறியா மனிதரெல்லாம்
மாக்களாகி மடிகின்றார்

அத்திப் பூவாய் இவர் நடுவில்
ஒரு மனிதன் வந்து பூத்தாலும்
சுத்தி உள்ள முள் மனங்கள் - அவனை
குத்தி குத்தி அழிக்கிறதே

மூன்று கண்ணை கொண்டவனே
அதர்மம் அழிக்க துடிப்பவனே
உன் மூன்றாம் கண்ணை திறந்துவிடு
அதன் அனலில் மாக்களை அழித்துவிடு

சக்தியை பாதியாய் கொண்டவனே
ஆனந்த தாண்டவம் செய்தவனே
உன் கருணை கொண்ட பார்வைக்குள்
இந்த காதல் பூக்களை வாழவிடு

Comments

Post a Comment

Popular posts from this blog

பாரதியார்

குழந்தையும் தெய்வமும்

என் மனைவிக்கு