அரங்கேற்றம்

என் காதல் துளி உன்னில்
விழுந்து முத்தாய் ஆனதடி

என் காதல் காயும் உன்கைவிரல்
பட்டு கனியாய் ஆனதடி

என் காதல் மொட்டு உன் கண்ணொளி
பட்டு பூவாய் மலர்ந்ததடி

என் காதல் வாசம் உன்னால் இன்று
காற்றில் மணக்குதடி

என் காதல் விதையும் உன் மனதில்
பதிந்து விருட்சம் ஆனதடி

என் காதல் பாலை உன்னால் இன்று
சோலை ஆனதடி

என் காதல் கவிதை உன்னால்தானே
அரங்கம் ஏறுதடி

Comments

Post a Comment

Popular posts from this blog

பாரதியார்

குழந்தையும் தெய்வமும்

என் மனைவிக்கு