குருவின் மடியில்


தத்தித்தாவி மரம் தாவும்
குரங்கொப்ப மனதும்

இடத்துக்கொரு நிறம் மாறும்
பச்சோந்தியொப்ப அறிவும்

மூவைந்து நாளுக்குள் கறைந்து வளரும்
நிலவொப்ப உடலும்

நானல்ல நானல்ல
உண்மை உணர்ந்து
இளைப்பாறுகிறேன் - என்
குருவின் மடியில்

Comments