உளரல்கள்

உலகிற்கே அதிசயம் எட்டானது
ஒரு நிலவு என்னிடம் வாய்
திறந்து பேசும் போது

அழகு நிலவாய்
      பெண்ணே நீ
வெட்கப்பட்டால்
      சந்திர கிரகணம்
கோவப்பட்டால்
      சூரிய கிரகணம்

நீ என்னிடம் பொய்
சொல்லும் நிமிடங்களில்
நினைவில் வருவது
அமாவாசையில் பொய்க்கும்
நிலவின் வருகை

எழுதுகோல் கூட
வெட்கப்பட்டது - நீ
அதை பிடித்து
எழுதும்போது

நீ பிடித்து எழுதுகையில்
      திக்கி நிற்கும் பேனா
உன் அருகாமையில்
      ஊமையாகும் நான்

காதலின் கண்கள் கனவுகளையே
         விரும்புகிறது!
காதலின் உதடுகள் பொய்களையே
         பேசுகிறது!
காதலின் காதுகளோ பொய்களையே
         ரசிக்கிறது!
ஆக....
காதல் பொய்யின் வாசம்...
காமம் மெய்யின் சுவாசம்....

Comments

  1. ரசித்தேன். எழுதுகோள் = எழுதுகோல்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், ரசித்தமைக்கும் நன்றி. பிழை மாற்றப்பட்டது.

      Delete
  2. நன்றாயிருக்கிறது

    ReplyDelete
  3. அழகு கவிதை அற்புதவரிகள்

    ReplyDelete

Post a Comment