என்னுடைய ஹைக்கூ தொகுப்பு - 1

நிலவு

இரவில் மட்டும் முகம் காட்டி
இளைஞர்களை மயக்கும்
மாயக்காரி

சூரியன்

மறையும் பொழுது கூட
மங்களமாக நீ

முள்

அழகை காக்க
அவசிய தேவை

சொல்

வெற்றி பெற்றவர்கள்
பயன்படுத்திய ஆயுதம்

வேகம்

கொடுப்பதில் வேண்டும்
வாங்குவதில் இல்லை

High heels

முள்ளோடு சேர்ந்து வரும் காலணி
பதம்பார்ப்பது அடுத்தவர் காலை

கிறுக்கல்

குழந்தையின் கிறுக்கல்களாய்
காதலியின் உளரல்கள்
அட
ஒன்று ஓவியம்
மற்றது கவிதை

Comments

Post a Comment